அதிமுக - பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், அதிமுக- பாமக இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்று(மார்ச் 18) மாலை கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர அதிமுக முன்வந்துள்ளது. அதன்படி, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆரணி, தர்மபுரி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் , சேலம் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.