அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக TTV தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிகாரத்திலும் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் கூறியது திமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளிக்கிறது. 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். ரஷ்யாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.