இன்றைய மின்தடை அறிவிப்பு

கடலூர்: தொழுதூர் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொழுதூர், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைசெருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், லக்கூர், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஓரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலகல்பூண்டி, கண்டமத்தான், வைத்தியநாதபுரம் பகுதியில் மின்தடை ஏற்படும்.

ஈரோடு: காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காராப்படி, வடுகம்பாளையம், குப்பந்துறை, லாகம் பாளையம், இருகாலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: உடுமலை அருகே பூலாங்கிணறு துணை மின் நிலையம் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனுத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல், மொடக்குபட்டி, ஆர்.வேலூர், குறிச்சிகோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமபுரம், குமாரபாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

நாமக்கல்: மோகனூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும். வாழவந்தி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

திருவண்ணாமலை: தீபம் நகர் மேற்கு கிழக்கு, வேலகந்தல்,மோட்டூர், இந்திராநகர், தேவனாம்பட்டு, காட்டுப்புதூர், உதிரம் பூண்டி, வள்ளலார் நகர், செல்வ விநாயகர் நகர், கற்பக விநாயகர் நகர், வானியந்தாங்கல், மலமஞ்சனூர், டி.வேலூர் ஆண்டப்பட்டு குப்பம் வேப்பூர் செக்கடி, விஜயப்பனூர், ராயண்டபுரம், ரெட்டியார் பாளையம், போந்தை, மலையனூர் மேல்பாச்சார், கீழ்பாச்சார் ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தருமபுரி: பென்னாகரம் துணைமின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பென்னாகரம், பி.அக்ஹாரம், ஒகேனக்கல், அதகபாடி, ஏரியூர், தாசம் பட்டி, சத்திய நாதபுரம், பெரும்பாலை, ஜக்கம்பட்டி, சின்னம்பள்ளி, பிக்கிலி, பாப்பாரப்பட்டி, கொல்லப் பட்டி, காட்டம்பட்டி, பனை குளம், திகிலோடு, ஆல மரத்துப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கோயம்புத்தூர்: சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி பகுதிகளில் இன்று (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

திருவள்ளூர்: ஆரணி, வடக்குநல்லூர், சோம்பட்டு, புதுவொயல், பெருவொயல், காரணி, முதலம்பேடு, கிளிக்கோடு, கவரப்பேட்டை, சின்னம்பேடு, துரைநல்லூர், ஆரணி, கொசவன்பேட்டை, பாலவாக்கம், போண்டவாக்கம், ராளப்பாடி, காரணி, மங்கலம் இன்று (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

வேலூர்: பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

சென்னை: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திருசூலம் பகுதி, ராஜாஜிநகர், மல்லிகாநகர், மலகந்தபுரம் , பாரதிநகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை பல்லவர் பகுதிகளில் இன்று (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி