மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (பிப்., 21) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, சென்னை, தேனி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தர்மபுரி, திருப்பூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், ஒருசில இடங்களில் மாலை 4 மணி வரையும் மின்சாரம் துண்டிக்கப்படும்.