மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்., 20) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் சில துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.