மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (மே 16) சனிக்கிழமை தமிழகத்தில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, தென்காசி, மதுரை, தர்மபுரி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், சில இடங்களில் பிற்பகல் 2 மணி வரையும் மின்சாரம் இருக்காது.