மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச., 15) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.