மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (பிப்., 12) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.