வார விடுமுறை நாளான இன்று (நவ., 16) காலை முதலே அசைவ பிரியர்கள் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று கோழி இறைச்சி கிலோ ரூ.230 முதல் ரூ.250 வரையிலும், ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரையிலும் விற்பனையாகிறது. மேலும், மீன்களில் சீலா மீன் - ரூ.1200, விளைமீன், ஊழி, பாறை மீன்கள் - ரூ.500, நண்டு - ரூ.700, கேரை மீன் - ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடலாம்.