ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் 16ம் தேதி உலக பாம்புகள் தினம் சிறப்பிக்கப்படுகிறது. பாம்புகளின் பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்த நாள் உலகளவில் கவனிக்கப்படுகிறது. நாம் வாழும் உலகில் மனிதர்கள், விலங்குகள், ஊர்வன, பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் அதன் வாழ்விடம் கிடைப்பதை உறுதி செய்வதை இந்நாள் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.