தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும், குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகளுக்கு மேலும் 625 காலிபணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் அறிவிப்பில் 645ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 625 சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.