தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), கடந்த டிசம்பர் மாதம் நடத்திய குரூப்-1 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகளை இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள் விரைவில் TNPSC இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:News18