குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-ல் 625 காலிப்பணியிடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முன்னதாக சார் பதிவாளர் உள்ளிட்ட 645 காலிப்பணியிடங்களை நிரப்ப 15.07.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (நவ.18) கூடுதலாக 625 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது.