டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று (பிப்.8) நடக்கவிருந்த குரூப்-2, 2ஏ தேர்வுகளில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சண்முகசுந்தரத்திற்கு மாற்றாக புதிய அலுவலராக வெங்கடபிரியாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி