TNPL தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (ஜூன் 14) இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தனது முதல் இரண்டுகளில் ஆட்டங்களில் திருப்பூர், நெல்லை அணிகளை வீழ்த்திய சேப்பாக் அணி 'ஹாட்ரிக்' வெற்றிப் பெறுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.