TNPL தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (ஜூன் 15) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.