வங்கக்கடலும் இந்திய பெருங்கடலும் சங்கமிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், ஆன்மீகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் தனுசுகோடி திகழ்கிறது. 1964-ம் ஆண்டு புயலால் அழிந்த பிறகும், எஞ்சிய பழைய கட்டிடங்களின் சிதைவுகளும் நீண்ட மணற்பரப்பும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகின்றன. தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய சாலை வசதிகளால் எளிதில் செல்லக்கூடிய தனுசுகோடிக்கு தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.