TN: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜென்டாக இருந்த பச்சையம்மாள் கடந்த 24ஆம் தேதி தீக்குளித்தார். நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பணம் கட்டியவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் தீக்குளித்ததாக போலீசார் தெரிவித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி