கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தில் 12ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்து அவரை கத்தியால் குத்தியிருக்கிறார். மேலும் மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையையும் பறித்து சென்றுவிட்டார். மாணவி, மாணவனை இழிவாக பேசியதால் இச்செயலை அவர் செய்துள்ளார்.