தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கான நேரம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதன்படி, “நிகழ்ச்சிக்கு முன்னதாக 2 மணி நேரம் முன்னர் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களை 3 மணி நேரத்திற்குள்ளாக முடிக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்பட்டால் காவல்துறை அதிகாரி முடிவெடுப்பார்” என இன்று (நவ.6) நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.