TN: வீட்டில் தனியே இருந்த காவலரின் தாய் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வீட்டில் தனியே இருந்த காவலரின் தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருபவர் விக்ராந்த். இவர் வேலைக்குச் சென்றபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரின் தாய் வசந்தா (65) என்பவரை கொடூரமாக கொன்றுள்ளனர். அவரின் நகைகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி