TN: தாய் கண் முன்னே சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை

கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பச்சமலை எஸ்டேட் பகுதியில் இன்று (ஜூன்.20) மாலை தாயின் கண் முன்னே வீட்டில் பின்புறம் நின்றிருந்த 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச்சென்றுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் நிலை என்ன ஆனது என்று இன்னும் தெரியவரவில்லை.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி