தமிழகத்தில் உள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்காகவும், மூன்று மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைப்பதற்காகவும் சுமார் ரூ.122 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரூர், மணப்பாறை, கோவில்பட்டி, மேட்டுப்பாளையம், செங்கோட்டை ஆகிய ஐந்து அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது.