சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி துவக்க விழா நேற்று (பிப்.,22) நடந்தது. அங்கு, தினமும் மாலை பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு நடைபெறும். அந்த வகையில் நேற்று நடந்த கலைநிகழ்ச்சியில், மேடையில் நடனமாடிய நடன கலைஞர் ராஜேஷ், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
நன்றி: தந்தி