சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தில் இருந்த இரண்டு ராட்சத தூண்கள் கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.