அடுக்குமாடி குடியிருப்பில் துணிகரமாக நுழைந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட முயற்சித்த ரவுடி சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரம் அடுக்குமாடி குடியிருப்பில் 14ஆவது மாடியில் வசித்து வரும் தனியார் வங்கி மேலாளரின் வீட்டு காலிங் பெல்லை அடித்து நகையை பறிக்க முற்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இச்சம்பத்தில் காயமடைந்த வங்கி மேலாளரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.