1984-ல் டாடா குழுமமும் தமிழக அரசின் 'டிட்கோ' அமைப்பும் இணைந்து ஓசூரில் தொடங்கிய 'டைட்டன்' நிறுவனம், இன்று உலகின் 5-வது மிகப்பெரிய வாட்ச் நிறுவனமாக அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. 1970 மற்றும் 80-களில் அதிநவீன 'குவார்ட்ஸ்' தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த கடிகாரங்களை வழங்குவதற்காக தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையுடன் இக்கூட்டு முயற்சி தொடங்கப்பட்டது. தமிழ் மண்ணை பெருமைப்படுத்தும் வகையில், 'டைட்டன் தமிழ்நாடு' சிறப்பு பதிப்புகளையும் வெளியிட்டு டைட்டன் நிறுவனம் சிறப்பித்துள்ளது.