பள்ளி முதல்வர் ஆர். மேகலா வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு பேரணியாகச் சென்று உலக சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாக உறுப்பினர் எஸ். விஜயகுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலையம் முன் நடைபெற்றது. இதில், நகராட்சி மேலாளர் ஜி. ரவி, சுகாதார ஆய்வாளர் எஸ். ராமலிங்கம், கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என். எஸ். குமார் மற்றும் மாணவர்கள் கைகளில் மரக்கன்றுகள் ஏந்தி விழிப்புணர்வு மனித சங்கிலி மேற்கொண்டனர்.