வந்தவாசி அருகே, ரூ. 57 கோடி செலவில் வந்தவாசி - காஞ்சிபுரம் மற்றும் ஆற்காடு - திண்டிவனம் சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ரூ. 48 கோடியிலும், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் ரூ. 9 கோடியிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன் இந்த சாலைப் பணிகளை தொடங்கிவைத்தார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.