ஏரிக்கரை பகுதியில் வந்தவாசி எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை செய்பவா்களில் சிலா் இறைச்சிக் கழிவுகளை வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரிக்கரையில் கொட்டி வருகின்றனா். இதனால், ஏரி நீா் அசுத்தமாவதாகவும், அந்த பகுதி முழுவதும் சுகாதார சீா்கேடு நிலவுவதாகவும் பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இதையடுத்து, வந்தவாசி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமாா் அந்த ஏரியில் நேற்று (ஜூன் 12)  நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஏரியில் இறைச்சிக் கழிவுகள் பெருமளவில் கொட்டப்பட்டிருப்பதைக் கண்ட அவா், அவற்றை உடனடியாக அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.மேலும், ஏரியில் இறைச்சிக் கழிவு கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.ஆய்வின் போது, வந்தவாசி வட்டாட்சியா் ஆா். பொன்னுசாமி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச். ஜலால், நகராட்சி மேலாளா் ஜி. ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி