வந்தவாசி: கல்லூரி மாணவர் பைக்கில் சென்றபோது பரிதாப மரணம்

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பி.காம். இரண்டாம் ஆண்டு மாணவர் கிஷோா், திங்கள்கிழமை பைக்கில் சென்றபோது இளங்காடு கூட்டுச் சாலை அருகே சாலையோர தடுப்பில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி