தி.மலை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி யாதவர் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 56) இவர் புதிய வீடு கட்டுவதற்காக தனது பழைய கான்கிரீட் தள வீட்டை நேற்று ஆட்கள் வைத்து இடித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏழுமலை மற்றும் கூலித் தொழிலாளியான வந்தவாசி எள்ளுப்பாறை பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 28) ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி