இதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் தேவனேஷ் (4). இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகேயுள்ள அனாதிமங்கலம் பெரிய ஏரி பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றனராம். பின்னர், நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடிச் சென்றனர். அப்போது, அவர்கள் ஏரியில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சரவணன் தலைமையிலான வீரர்கள் நிகழ்விடம் சென்று ஏரி மதகு பகுதியில் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின்னர், பரத், தேவனேஷ் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, இருவரின் சடலங்கள் உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.