திருவண்ணாமலை: முன் விரோத தகராறில் தாக்குதல்; இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் டிவி மெக்கானிக் சரவணகுமார் (42). இவர், கடந்த 18-ஆம் தேதி அந்தக் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக இவரை வழிமறித்த இதே கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (28), பூவரசன் (20) ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். 

இதில் பலத்த காயமடைந்த சரவணகுமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ், பூவரசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி