இந்த நாளில் ஆசிரியர் பணியை அறப்பணி என்பதற்கு ஏற்ப மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு செயல்பட்ட சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஜோதி நிதி உதவி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசனுக்கு இன்று (செப்.,5)டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.