வந்தவாசி: நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை

வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு தேவதர்ஷினி (19) மற்றும் பிரியதர்ஷினி (17) என்று இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வராஜ் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேவதர்ஷினிக்கு மருத்துவராக வேண்டும் என்று கனவு இருந்து வந்த நிலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்து எப்படியாவது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்து படித்து வந்தார். ஆனால் தேவதர்ஷினிக்கு பயம் இருந்து வந்த நிலையில் நீட் தேர்வு நெருங்க நெருங்க தேவதர்ஷினிக்கு பயம் அதிகரித்தது. 

இந்த நிலையில் தேவதர்ஷினி ஊரப்பாக்கம் ஐயஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்கு பதிவு செய்து தேவதர்ஷினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். 

இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தேவதர்ஷினியின் உடலை சொந்த கிராமமான ராயனந்தல் கிராமத்திற்கு எடுத்து வந்து வீட்டின் முன்பு உடல் வைக்கப்பட்டது. அப்போது தேவதர்ஷினியின் உடலைப் பார்த்து உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நெஞ்சை உருகச் செய்தது.

தொடர்புடைய செய்தி