உடனே, தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முட்புதரில் இருந்த அரிய வகை ஆந்தையை லாவகமாக பிடித்தனர். பின்னர் பார்த்தபோது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை நிற ஆந்தை என்றும், ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பல்வேறு வகை பறவைகள், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பறந்து வந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும், மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும், வலசை வருவது வழக்கம். அதுபோல் தான் இந்த அரிய வகை வெள்ளை ஆந்தை வலசை வந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து பிடிபட்ட ஆந்தையை தீயணைப்புத்துறை வீரர்கள் கொண்டு சென்று அருகில் உள்ள வென்குன்றம் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.
வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்