திருவண்ணாமலை: தலித் விடுதலை இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கத்தில் நடைபெற்ற தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஒன்றிய அரசு திணிக்க நினைக்கும் மும்மொழிக்கொள்கையால் ஏற்படும் அநீதிகள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கழகத் துணைச் செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  மதிவேந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி