திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கில் போக்சோ விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை பா. உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் சீ. கேசவ ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எம். ஜெய்சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் டி. சாந்தி பங்கேற்று, பெண்களுக்கான பாதுகாப்பு முறைமைகள் பற்றியும், செல்போன் பயன்பாடால் ஏற்படும் விபரீத விளைவுகளையும் பற்றி விளக்கி பேசினார். மேலும் போக்சோ விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இன்றைய சூழலில் கல்வியே மாணவர்களின் எதிர்கால சொத்து என்று வலியுறுத்தினார். பெண் காவலர் ஏ. நந்தினி வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் பள்ளி ஆசிரியை சி. விஜயலட்சுமி நன்றி கூறினார்.