இதையடுத்து உழவர் சந்தையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் யாரும் சரிவர வராததால் உழவர் சந்தை மீண்டும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனிடையே, உழவர் சந்தை சீராக இயங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமையிலான கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் கூடையில் காய்கறிகளை வைத்துக் கொண்டு அவர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது