வந்தவாசி: கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த எம்பி, எம்எல்ஏ

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஒன்றியம் மங்களம் மாமண்டூர் ஊராட்சியில் சுமார் 48.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.டி. கார்த்திகேயன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.ஆர்.பி பழனி சி.ஆர். பெருமாள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எம்.சி. சந்திரன், திமுக கட்சி நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி