இதைக் கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மதியரசன் என்ற 20 வயது வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் மதியரசனை தேடி வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு இப்போது தான் அவர் சிக்கியுள்ளார். மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
“விஜய் மேலாளர் என்னிடம் பணம் தருவதாக பேரம் பேசினார்”.. தவாக தலைவர் வேல்முருகன்