வந்தவாசி: மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குணாளன் (44). இவர், கடந்த 15-ஆம் தேதி அந்தக் கிராம மலையடிவாரத்தில் இயற்கை உபாதைக்காக சென்றார். அப்போது இவரை வழிமறித்த அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (39) மது அருந்த ரூ. 200 கேட்டுள்ளார். இதற்கு குணாளன் மறுத்ததால் ஆத்திரமடைந்த முருகன் விறகுக் கட்டையால் குணாளனை தாக்கினாராம். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். இதில் காயமடைந்த குணாளன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தேசூர் போலீசார் முருகனை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி