தி.மலை: எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாரை அடுத்த அகரக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் வளாகம் புனரமைக்கப்பட்டு சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று புனித நீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், தெள்ளார் மத்திய ஒன்றிய கழக செயலாளர் T. D. ராதா, முன்னாள் ஒன்றிய செயலாளர் V. ராமு, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத் தலைவர் M. விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் C. ராமலிங்கம், P. சிவக்குமார், நகர செயலாளர் B. காமராஜ், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் M. முருகன், மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் கோ. சிவராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் E. அருண், சிறுபான்மை அணி ஒன்றிய துணை அமைப்பாளர் அன்சர் பாஷா, ராஜ்குமார், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி