தி.மலை: கல்லூரியில் 450 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 450 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. கல்லூரித் தலைவா் எம். ரமணன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், ஆரணி எம். பி. எம். எஸ். தரணிவேந்தன் மற்றும் வந்தவாசி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமாா் மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினா். திமுக நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி