மாண்புமிகு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ. வ. வேலு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.