சிறப்பு அழைப்பாளராக, கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சு. வெங்கடேசன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் அவர் பேசியதாவது: உணவு பாதுகாப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 07 ஆம் தேதி கொண்டாப்பட்டு வருகிறது. நாம் உண்ணும் உணவே மருந்து ஆகும். நாம் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும், மேலும் குர்குரே, பாஸ்ட் புட், பரோட்டா போன்றவைகளை பெரும்பாலும் உட்கொள்ள கூடாது. தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் வைட்டமின்கள் உள்ள உணவுப்பொருள்களை கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் பிரகாஷ், வருவாய்த்துறை மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது நன்றி கூறினார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது