திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. வந்தவாசி வட்டாட்சியரும், உதவி வாக்குப்பதிவு அலுவலருமான சம்பத்குமார் சந்நிதி புதுத் தெருவில் இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார். வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட 282 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வாக்காளர்களிடம் வழங்குவர். வாக்காளர்கள் இந்தப் படிவங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் உதயகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.