பைனான்ஸ் நிறுவன மேலாளரை சரமாரி தாக்கய நபர் - வழக்கு பதிவு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பைனான்ஸ் கட்டாத வாடிக்கையாளரின் பைக்கை பறிமுதல் செய்ய சென்ற தனியார் நிதி நிறுவன மேலாளர் ஜிந்தேந்திரபிராத் மீது தாக்குதல் நடத்திய பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆறு மாதங்களாக தவணை செலுத்தாததால் பைக்கை பறிமுதல் செய்ய சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த மேலாளர் ஜிந்தேந்திரபிராத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி