சிறப்பு அழைப்பாளராக, நகராட்சி மேனேஜர் எம். ரவி (நகராட்சி ஆணையர், பொறுப்பு) பங்கேற்று, உலகச் சுற்றுச்சூழல் தினத்தை பற்றிய விழிப்புணர்வு தகவல்களை விளக்கினார். மேலும் நெகிழி பயன்பாடுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், மரங்களை நட்டு சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாப்பதில் மாணவர்களுக்கு அதிகம் பங்கு உண்டு என்று வலியுறுத்தினார். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு பற்றி விளக்கினார். சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு 101 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. நகராட்சி அலுவலர் பிச்சாண்டி, தொழிற்பயிற்சி நிர்வாகி சந்திரசேகரன், ஆசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், தாமோதரன், அரிதாசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி